"பாகிஸ்தான் ஒரு அமைதியான நாடு, எங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வந்தால்.." - ஷபாஸ் ஷெரீப்

பாகிஸ்தானில் நேற்று ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

இஸ்லாமாபாத்,

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடுத்தது. இதையடுத்து பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதால், இரு நாடுகளுக்கம் இடையே 4 நாட்கள் ராணுவ தாக்குதல் நீடித்தது. பின்னர், பேச்சுவார்த்தை மூலம் ராணுவ நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் பாகிஸ்தானில் நேற்று ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நாடு முழுவதும் பேரணிகள் நடத்தப்பட்டன. இஸ்லாமாபாத்தில் நடந்த விழாவில், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசினார். "பாகிஸ்தான் ஒரு அமைதியான நாடு, ஆனால் அதன் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வந்தால் தகுந்த பதிலடி கொடுக்கும் உரிமை அதற்கு உள்ளது," என்று அவர் கூறினார்

பாகிஸ்தான் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, "சண்டை நிறுத்தத்தை இந்தியா உண்மையாக கடைப்பிடிக்க வேண்டும். இந்தியா விரோதப்போக்கை மீண்டும் தொடங்கினால் நாங்கள் பதிலடி கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com