வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் மாயம்

பலுசிஸ்தானில் மூத்த அதிகாரிகளை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் மாயமானதாக தகவல் வெளியாகி உள்ளது.
 Image Courtesy: ANI Twitter
 Image Courtesy: ANI Twitter
Published on

கராச்சி,

பாகிஸ்தானில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். நாட்டின் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், பலுசிஸ்தான், சிந்து, கில்கிட்-பால்டிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா ஆகிய மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்.

பாகிஸ்தான் ராணுவம் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் ராணுவ ஹெலிஹாப்டர் ஒன்று மாயமானதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த ஹெலிஹாப்டரில் நிவாரணப்பணிகளை மேற்பார்வை செய்து வரும் கமாண்டர் ஜெனரல் சர்ப்ராஸ் அலி மற்றும் மற்ற ஐந்து மூத்த ராணுவ அதிகாரிகள் ஹெலிகாப்டரில் பயணித்ததாக கூறப்படுகிறது.

பலுசிஸ்தானின் லாஸ்பேலாவில் வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் மாயமானதாகவும் அந்த ஹெலிகாப்டரை தேடும் பணி நடந்து வருவதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com