பாகிஸ்தான்: வங்கியில் கொள்ளை முயற்சி; 12 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படை

பயங்கரவாதிகளால் பணய கைதிகளாக சிறை பிடிக்கப்பட்ட ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
கராச்சி,
பாகிஸ்தானின் தென்மேற்கே பலுசிஸ்தான் மாகாணத்தில் கரன் நகரில் 2 வங்கிகள் மற்றும் ஒரு காவல் நிலையத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அவர்கள் சில ஊழியர்களை பணய கைதிகளாக சிறை பிடித்தனர். இதனால், அந்த பகுதியில் பதற்றம் தொற்றி கொண்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் அதிரடியாக நடவடிக்கை எடுத்தனர். இதில், 3 தனித்தனி துப்பாக்கி சண்டைகளில் 12 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
இதன்பின்னர் பயங்கரவாதிகளால் பணய கைதிகளாக சிறை பிடிக்கப்பட்ட ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்த தாக்குதல் பாகிஸ்தானில் நடப்பு ஆண்டின் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் என படையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story






