பத்மாவத் படத்தில் எந்தஒரு காட்சியையும் நீக்காமல் பாகிஸ்தானில் வெளியிட அனுமதி

பத்மாவத் படத்தில் எந்தஒரு காட்சியையும் நீக்காமல் பாகிஸ்தானில் வெளியிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. #Padmaavat #Pakistan
பத்மாவத் படத்தில் எந்தஒரு காட்சியையும் நீக்காமல் பாகிஸ்தானில் வெளியிட அனுமதி
Published on

இஸ்லாமாபாத்,

சர்ச்சைக்குரிய பத்மாவத் படத்தில் எந்தஒரு காட்சியையும் நீக்காமல் திரையிட பாகிஸ்தான் தணிக்கை வாரியம் அனுமதி வழங்கி உள்ளது.

பத்மாவத் திரைப்படத்தில் எந்தஒரு காட்சி நீக்கமும் இல்லாமல் அனைவரும் பார்க்கும் வகையில் யு சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது என பாகிஸ்தான் திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலைவர் முபசீர் ஹாசன் தன்னுடைய டுவிட்டரில் தகவல் வெளியிட்டு உள்ளார்.

பாகிஸ்தானில் தணிக்கை வாரியம் அனுமதி வழங்கியதை அடுத்து அங்கு திரையரங்குகளில் படம் வெளியிடப்பட உள்ளது. பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்களுக்கு பெரிய அளவிலான மார்க்கெட் காணப்படுகிறது. சர்ச்சைக்குரிய பத்மாவத் படத்தில் அலாவுதீன் கில்ஜியை எதிர்மறையாக சித்தரித்து உள்ளது காரணமாக பாகிஸ்தானில் காட்சி நீக்கத்தை எதிர்க்கொள்ளும் என அச்சம் நிலவியது. ஆனால் தணிக்கை வாரியம் எந்தஒரு காட்சியையும் நீக்காமல் படத்தை திரையிட அனுமதியை வழங்கி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com