பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகம்மது குரோஷிக்கு கொரோனா

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகம்மது குரோஷிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகம்மது குரோஷிக்கு கொரோனா
Published on

இஸ்லமாபாத்,

பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி பாகிஸ்தானில் சுமார் 2.25 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகம்மது குரோஷியும் கொரோனா நோய் தொற்றில் இருந்து தப்பவில்லை.

தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக ஷா முகம்மது குரோஷி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து ஷா முகம்மது குரோஷி தனது டுவிட் பதிவில், எனக்கு கடுமையான காய்ச்சல் இருந்தது. உடனடியாக என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன்.

தற்போது எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அல்லாவின் கருணையால் நான் வலுவாகவும் தன்னம்பிக்கையுடன் உள்ளேன்.வீட்டில் இருந்தபடியே எனது பணிகளை நான் தொடர்வேன் என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com