ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்த பாகிஸ்தான்

பொருளாதார தடைகளை மீறி ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை பாகிஸ்தான் இறக்குமதி செய்தது.
Image Courtacy: AFP
Image Courtacy: AFP
Published on

இஸ்லாமாபாத்.

உக்ரைன்-ரஷியா போர் தொடங்கியதையடுத்து ரஷியாவிடம் இருந்து எரிபொருள் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்தது. இதனால் நெருக்கடிக்கு உள்ளான ரஷியா தன் நாட்டின் கச்சா எண்ணெயை சலுகை விலையில் வழங்குவதாக அறிவித்தது. இதனால் இந்தியா உள்பட பல நாடுகள் ரஷியாவின் சலுகை விலை கச்சா எண்ணெய் அறிவிப்பால் எண்ணெயை இறக்குமதி செய்து பலன் அடைந்தது.

கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் அண்டை நாடான பாகிஸ்தானில் நிதிநிலைமை மோசமானது. உலக வங்கி உள்பட பெரும் அமைப்புகளிடம் இருந்து நிதி பெறும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு மத்தியிலும் ரஷியாவின் மலிவு விலை கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யப்போவதாக அந்தநாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்தார். அதன்படி ரஷியாவின் முதல் தவணை எண்ணெய் பீப்பாய்கள் கராச்சி துறைமுகம் வந்ததுள்ளது. சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் பீப்பாய்கள் வந்திருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷியாவின் கச்சா எண்ணெயை முதல் முறையாக பாகிஸ்தான் இறக்குமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com