இந்தியாவில் இருந்து மருந்துகள் இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு அனுமதி

இந்தியாவிலிருந்து உயிர்காக்கும் முக்கிய மருந்துகளை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவில் இருந்து மருந்துகள் இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு அனுமதி
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு மக்களுக்கு தேவையான மருந்து, உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. நிதி நெருக்கடியை சமாளிக்க பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் 3 பில்லியன் டாலர் கடன் உதவி வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தானில் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்கும் வகையில் இந்தியாவில் இருந்து மருந்துகள் இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் (டி.ஆர்.ஏ.பி.) வெளியிட்டுள்ள அறிவிக்கையில், "இறக்குமதி கெள்கை ஆணை 2022-ன் கீழ், இந்தியாவிலிருந்து உயிர்காக்கும் முக்கிய மருந்துகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

இதையடுத்து, இந்தியாவில் இருந்து புற்றுநேய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளை மருத்துவமனைகள் அல்லது பெதுமக்கள் கெள்முதல் செய்வதற்கு இனி எந்த தடையும் இல்லை. அவ்வாறு இறக்குமதி செய்வதற்கு தடையில்லா சான்று(என்.ஓ.சி.) பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com