மசூத் அசார் பாகிஸ்தானில் இல்லை- பிலாவல் பூட்டோ


மசூத் அசார் பாகிஸ்தானில் இல்லை- பிலாவல் பூட்டோ
x

ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் சுதந்திரமாக இருந்து வருவதாக கூறுப்படும் தகவல் உண்மை இல்லை.

ஜூலை

பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு தலைவர் மசூத் அசார், இந்திய பாராளுமன்ற தாக்குதல், மும்பைத் தாக்குதல், பதான்கோட் தாக்குதல், புல்வாமா தாக்குதல் உள்–ளிட்டவற்றில் தொடர்புடையவர். அவர் இந்தியாவின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஒருவர்.மசூத் அசார் மற்றும் லஷ்கர்-இ தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் மசூத் அசார் பாகிஸ்தானில் இல்லை என்று பாகிஸ்தான் முன்னாள் அமைச்சரும், ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவல் பூட்டோ தெரிவித்து உள்ளார். தனியார் ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் சுதந்திரமாக இருந்து வருவதாக கூறுப்படும் தகவல் உண்மை இல்லை. அவர் பாகிஸ்தான் அரசின் காவலில் உள்ளார். மசூத் அசாரை பொறுத்தவரை அவரை கைது செய்யவோ அல்லது அடையாளம் காணவோ முடியவில்லை.அவர் பாகிஸ்தானில் இல்லை. ஆப்கானிஸ்தானில் தஞ்சம் அடைந்து இருக்கிறார் என்று நாங்கள் நம்புகிறோம். அவர் பாகிஸ்தான் மண்ணில் இருப்பதாக இந்திய அரசாங்கம் எங்களுடன் தகவலைப் பகிர்ந்து கொண்டால், அவரைக் கைது செய்வதிலும் நாடு கடத்துவதிலும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் உண்மை என்னவென்றால் இந்திய அரசாங்கத்திடம் தகவல் இல்லை' இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story