காஷ்மீரில் படுகொலை நடப்பதாக கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை -பாகிஸ்தான் வழக்கறிஞர் கைவிரிப்பு

காஷ்மீரில், படுகொலை நடப்பதாக பாகிஸ்தான் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை. ஆதாரம் இல்லாதபோது, சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியாவை சமாளிப்பது கடினம் என பாகிஸ்தானுக்காக ஆஜராகும் வழக்கறிஞர் கவார் குரேஷி கூறியுள்ளார்.
காஷ்மீரில் படுகொலை நடப்பதாக கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை -பாகிஸ்தான் வழக்கறிஞர் கைவிரிப்பு
Published on

இஸ்லாமாபாத்

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதுடன், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசமாக மாற்றியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், சர்வதேச நாடுகளின் உதவியை நாடியது. ஆனால், எந்த நாடும் பாகிஸ்தானை ஆதரிக்கவில்லை.

இதனால், விரக்தியடைந்த பாகிஸ்தான், சீனா உதவியுடன் ஐ.நா., பாதுகாப்பு சபையில் முறையிட்டது. ஆனால், காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள் விவகாரம் என நிரந்தர உறுப்பு நாடுகள் கூறியதை ஐ.நா.,வும் ஏற்று கொண்டன. இதனையடுத்து, காஷ்மீர் விவகாரம் குறித்து சர்வதேச அமைப்புகளில் கேள்வி எழுப்பப்போவதாக கூறிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்த விவகாரம் குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக பாகிஸ்தான் கூறியது.

இந்நிலையில், சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தானுக்காக ஆஜராகும் கவார் குரேஷி கூறுகையில், காஷ்மீரில், படுகொலை நடப்பதாக பாகிஸ்தான் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை. ஆதாரம் இல்லாத போது, சர்வதேச நீதிமன்றத்தில், இந்தியாவை சமாளிப்பது கடினம் எனக்கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com