பாகிஸ்தானில் இம்ரான்கானின் மருமகன் கைது


பாகிஸ்தானில் இம்ரான்கானின் மருமகன் கைது
x
தினத்தந்தி 23 Aug 2025 5:15 AM IST (Updated: 23 Aug 2025 5:16 AM IST)
t-max-icont-min-icon

வன்முறை தொடர்பாக இம்ரான்கானின் மருமகன் ஷாஹ்ரேஸ் கானை லாகூர் போலீசார் கைது செய்தனர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 72) மீது ஊழல், பணமோசடி உள்பட 150-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுதொடர்பான ஒரு வழக்கில் அவரை குற்றவாளி என கோர்ட்டு உறுதி செய்தது. எனவே ராவல்பிண்டியில் உள்ள கோர்ட்டில் அவர் தண்டனை அனுபவித்து வருகிறார். முன்னதாக கடந்த 2023-ம் ஆண்டு மே 9-ந்தேதி போலீசார் அவரை கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறை தொடர்பாக பஞ்சாப் மாகாணத்தில் வசிக்கும் இம்ரான்கானின் மருமகன் ஷாஹ்ரேஸ் கானை லாகூர் போலீசார் கைது செய்தனர்.

1 More update

Next Story