‘பாகிஸ்தான் எங்கள் இரண்டாம் தாயகம்’ - தலீபான்கள் அறிவிப்பு

பாகிஸ்தான் எங்கள் இரண்டாம் தாயகம் என்று தலீபான்கள் அறிவித்துள்ளனர்
‘பாகிஸ்தான் எங்கள் இரண்டாம் தாயகம்’ - தலீபான்கள் அறிவிப்பு
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ள தலீபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜபிகுல்லா முஜாகித் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பாகிஸ்தான், எங்களது 2-வது தாயகம் போன்றது. பாகிஸ்தானுடன் ஆப்கானிஸ்தான் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது. மதம் என்று வருகிறபோது நாங்கள் பாரம்பரியமாக இணைந்து இருக்கிறோம். இரு நாட்டு மக்களும் கலந்துறவாடுகிறார்கள். எனவே பாகிஸ்தானுடனான உறவை மேலும் வலுப்படுத்த விரும்புகிறோம். ஆப்கானிஸ்தானை தலீபான்கள் பிடித்ததில் பாகிஸ்தானுக்கு எந்த பங்கும் இல்லை.

பாகிஸ்தானும், இந்தியாவும் நிலுவையில் உள்ள பிரச்சினை களை பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுடனும் தலீபான்கள் நல்லுறவு வைத்துக்கொள்ளத்தான் விரும்புகிறோம்.

நாங்கள் அமைக்க விரும்புகிற அரசு இஸ்லாமிய மதத்தின் அடிப்படையில், அனைத்து ஆப்கானிஸ்தானியர்களும் பங்கு பெறுவதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

ஆப்கானிஸ்தான் மண்ணை எந்தவொரு நாட்டுக்கும் எதிராக பயன்படுத்த விட மாட்டோம். தலீபான்கள், ஆப்கானிஸ்தானில் அனைத்து பகுதிகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டாயிற்று. அமைதியையும், இயல்பு நிலைமையையும் மீட்டெடுத்து இருக்கிறோம்

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com