பாகிஸ்தானில் பரிதாபம்: கல் குவாரியில் பாறை சரிந்து 22 தொழிலாளர்கள் சாவு

பாகிஸ்தானில் கல் குவாரியில் பாறை சரிந்து 22 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானில் பரிதாபம்: கல் குவாரியில் பாறை சரிந்து 22 தொழிலாளர்கள் சாவு
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்துங்வா மாகாணம் மொஹமண்ட் மாவட்டத்தில் பளிங்கு கல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த குவாரியில் நேற்று வழக்கம் போல் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென பெரிய பாறை ஒன்று சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது.

இதில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து அங்கு உடனடியாக மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன.

எனினும் 22 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. மேலும் 15 முதல் 20 பேர் வரை இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று தெரிகிறது. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com