பொருளாதார நெருக்கடி: நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை தனியார் மயமாக்க பாகிஸ்தான் திட்டம்

சோதனை முயற்சியாக முதலில் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனியார்மயமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை தனியார் மயமாக்க பாகிஸ்தான் திட்டம்
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் நாட்டின் பண வீக்கம் அதிகரித்து அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக எகிறி உள்ளது. இதனை சமாளிக்க உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றிடம் இருந்து கடன்களை வாங்கி சமாளித்து வருகிறது.

இந்தநிலையில் நஷ்டத்தில் இயங்கி வரும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்க பாகிஸ்தான் அரசாங்கம் திட்டமிட்டு உள்ளது. இதன் சோதனை முயற்சியாக முதலில் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனியார்மயமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு பிறகு நியூயார்க்கில் உள்ள ரூஸ்வெல்ட் ஓட்டல், ஸ்டேட் லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட உள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் கூறுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com