சீனாவுடன் இணைந்து உயிரியல் ஆயுத தயாரிப்பில் ஈடுபடுகிறோமா? பாகிஸ்தான் பதில்

இந்தியா மற்றும் போட்டி நாடுகளுக்கு எதிரான தாக்குதலுக்காக ஆபத்தான உயிரியல் ஆயுதங்களை தயாரிக்க பாகிஸ்தானும் சீனாவும் இரகசிய மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
சீனாவுடன் இணைந்து உயிரியல் ஆயுத தயாரிப்பில் ஈடுபடுகிறோமா? பாகிஸ்தான் பதில்
Published on

இஸ்லமாபாத்,

சீனாவின் உகான் மாகாணத்தில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி மையத்திலிருந்தே கொரோனா வைரஸ் பரவியதாக குற்றச்சாட்டு இன்றளவும் உள்ளது. ஆனாலும் இந்த குற்றச்சாட்டை மருத்துவ நிபுணர்களும் விஞ்ஞானிகளும் மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் தி கிளாக்சன் செய்தி நிறுவனம் அண்மையில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அதில், இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக ஆபத்தான உயிரியல் ஆயுத திறன்களை விரிவுபடுத்துவதற்கான மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் சீனாவும் பாகிஸ்தானும் கையெழுத்திட்டுள்ளது.

ஆபத்தான ஆந்த்ராக்ஸ் தொடர்பான பல ஆராய்ச்சி திட்டங்கள் , இந்த ஒப்பந்தத்தில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த தகவலை முற்றிலும் நிராகரித்துள்ள பாகிஸ்தான், இது அரசியல் ரீதியாக சித்தரிக்கப்பட்டது எனவும் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com