இந்திய விமானி அபிநந்தனை விமானத்தில் அழைத்து வரும் இந்தியாவின் கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்தது

இந்திய விமானி அபிநந்தனை விமானத்தில் அழைத்துவரும் இந்தியாவின் கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்து விட்டது.
இந்திய விமானி அபிநந்தனை விமானத்தில் அழைத்து வரும் இந்தியாவின் கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்தது
Published on

இந்திய விமானி அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார். இந்திய பாதுகாப்புத்துறை அபிந்தனை விமானம் மூலம் அழைத்துவர முடிவு செய்தது. பாகிஸ்தானுக்கு சிறப்பு விமானத்தை அனுப்பி அபிநந்தனை அழைத்து வர முடிவெடுத்தது. இதுதொடர்பாக பாகிஸ்தான் அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் வான் பகுதியில் இந்திய விமானம் பறக்க அனுமதி மறுத்த பாகிஸ்தான் அரசு, இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. அபிநந்தனை வாகா எல்லை வழியாக மட்டுமே அனுப்ப முடியும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டது. இதையடுத்து வாகா எல்லையின் வழியாக அபிநந்தன் அழைத்துவரப்பட உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com