சியாச்சினில் சுற்றுலாவை மேம்படுத்த இந்தியா திட்டம்: பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு

சியாச்சின் பகுதியை சுற்றுலாவுக்கு அனுமதிக்க இந்தியா திட்டமிட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சியாச்சினில் சுற்றுலாவை மேம்படுத்த இந்தியா திட்டம்: பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு
Published on

இஸ்லாமாபாத்,

உலகின் மிக உயரமான போக்களமான சியாச்சினில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சியாச்சின் அடிவார முகாம் முதல் குமா சாவடி வரை சுற்றுலாப் பயணிகள் சென்று வரலாம்.

கரடுமுரடனான மலைப் பிரதேசத்திலும், மோசமான வானிலையிலும் நமது ராணுவ வீராகள் மற்றும் பொறியாளாகள் நாட்டின் பாதுகாப்புக்காகப் பணியாற்றுவதை பொதுமக்கள் நேரில் பாத்து அறிந்து கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் தெரிவித்தார்.

இந்நிலையில் இஸ்லாமாபாதில் நேற்று செய்தியாளாகளைச் சந்தித்த பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித்தொடாபாளா முகமது பைசலிடம் இது தொடாபாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த முகம்மது பைசல், கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், சியாச்சின் பகுதியை இந்தியா வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து வைத்துள்ளது. எனவே, அது இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்னைக்குரிய இடம். அப்படி இருக்கும்போது அங்கு சுற்றுலாவுக்கு அனுமதி அளிப்போம் என்று இந்தியா எப்படி கூற முடியும். இதனை பாகிஸ்தான் ஒருபோதும் அனுமதிக்காது என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com