பாகிஸ்தான் பாதுகாப்பு படை அதிரடி வேட்டை; 17 பயங்கரவாதிகள் பலி

அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள், சக்தி வாய்ந்த வெடிகுண்டு உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

பாகிஸ்தான் பாதுகாப்பு படை அதிரடி வேட்டை; 17 பயங்கரவாதிகள் பலி
Published on

கராச்சி

பாகிஸ்தானுக்கு உட்பட்ட பலூசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா நகரில் கடந்த வாரம் ரெயில் ஒன்றின் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 3 பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 16 பேர் பலியானார்கள்.

இதனையடுத்து, பாதுகாப்பு படையினர் மஸ்துங், நுஷ்கி, ஜெஹ்ரி, குஜ்தார் மற்றும் கெச் ஆகிய நகரங்களில் அதிரடி வேட்டை நடத்தினர். இந்த தாக்குதலில், பல்வேறு பதுங்கு குழிகள் தகர்க்கப்பட்டன. அப்போது, பித்னா-அல்-இந்துஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதற்கு பதிலடியாக, பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 17 பயங்கரவாதிகள் பலியாகி உள்ளனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள், சக்தி வாய்ந்த வெடிகுண்டு உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. அவர்கள் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு உள்ளனர் என படையினர் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com