பாகிஸ்தான்: பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து 17 மாணவர்கள் பலியான சோகம்

இதில், பாடம் நடத்தி கொண்டிருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் பலர் சிக்கி கொண்டனர்.
பாகிஸ்தான்:  பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து 17 மாணவர்கள் பலியான சோகம்
Published on: 

பெஷாவர்

பாகிஸ்தானில் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததில் 17 மாணவர்கள் பலியானார்கள்.

பாகிஸ்தானின் வடமேற்கே பெஷாவர் நகரில் திர் காலனி பகுதியில் பள்ளிக்கூடம் ஒன்று வழக்கம்போல் இன்று காலை செயல்பட்டது. அப்போது, அதன் மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்தது.

இதில், பாடம் நடத்தி கொண்டிருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் பலர் சிக்கி கொண்டனர். பலத்த காயமடைந்த அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

17 மாணவர்கள் பலி

எனினும், ஆசிரியர் உள்பட 17 மாணவர்கள் பலியாகி உள்ளனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். பலியான மாணவர்கள் அனைவரும் 13 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். சிகிச்சை பெறுபவர்களில் பலரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. அதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com