அமெரிக்கா-சீனா இடையே பாலமாக செயல்பட பாகிஸ்தான் விரும்புகிறது - இம்ரான்கான்

அமெரிக்கா - சீனா இடையேயான உறவில் பாலமாக செயல்பட பாகிஸ்தான் விரும்புவதாக இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா-சீனா இடையே பாலமாக செயல்பட பாகிஸ்தான் விரும்புகிறது - இம்ரான்கான்
Published on

லாகூர்,

அமைதி மற்றும் வளர்ச்சிநிறைந்த தெற்கு ஆசியா என்ற தலைப்பில் பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத்தில் இன்று கருத்தரங்கு நடைபெற்றது.

இந்த கருத்தரங்களில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பங்கேற்றார். கருத்தரங்கள் அமெரிக்கா - சீனா இடையேயான உறவு குறித்து அவர் பேசினார்.

இம்ரான்கான் பேசுகையில், பனிப்போர் நோக்கு செல்லும் சூழ்நிலை உருவாகி வருகிறது. நாடுகள் குழுக்களாக உருவாகி வருகின்றன.

இந்த குழுக்கள் உருவாகுவதை தடுக்க பாகிஸ்தான் தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும். எனென்றால், எந்த குழுக்களுடனும் நாம் இணையக்கூடாது. அமெரிக்கா மற்றும் சீனாவுடன் பாகிஸ்தான் சிறந்த உறவு கொண்டுள்ளது. அந்த இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் அதிகரித்து வரும் விரிசலை நிறுத்த பாகிஸ்தான் பாலமாக செயல்பட விரும்புகிறது என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com