பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சவுதி அரேபியா பயணம்

பிராந்திய பாதுகாப்பு குறித்து பாகிஸ்தான் பிரதமர் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சவுதி அரேபியா பயணம்
Published on

இஸ்லாமாபாத்,

வளைகுடா பிராந்தியத்தில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி நேற்று பாகிஸ்தான் பிரதமர் சவுதி அரேபியாவுக்கு சென்றார். அங்கு பிராந்திய பாதுகாப்பு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.

கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான 'பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தின்' படி, சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பாகிஸ்தான் ராணுவம் துணை நிற்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களால் சவுதிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து ஏற்கனவே பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் ஆலோசனை நடத்தியிருந்தார்.

ஈரானுடன் நல்லுறவு வைத்திருக்கும் பாகிஸ்தான், சவுதிக்கும் ஆதரவு அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. "தேவைப்படும் முன்பே சவு திக்கு பாகிஸ்தான் துணை நிற்கும்" என அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com