இந்தோனேசியாவில் பஸ் கவிழ்ந்து விபத்து - 15 பேர் பலி

விபத்தில் 19 பேர் காயமடைந்தனர்
இந்தோனேசியாவில் பஸ் கவிழ்ந்து விபத்து - 15 பேர் பலி
Published on

ஜகார்தா,

ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டின் தலைநகர் ஜகார்தாவில் இருந்து ஜாவா தீவில் உள்ள யோக்யகர்த்தா நகருக்கு நேற்று நள்ளிரவு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 34 பேர் பயணித்தனர்.

இந்நிலையில், ஜாவா தீவின் செமரங் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் பயணித்தனர். மேலும், 19 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com