பாகிஸ்தானில் பயணிகள் வேன் ஆற்றில் கவிழ்ந்ததில் 11 பேர் பலி

விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் பயணிகள் வேன் ஆற்றில் கவிழ்ந்ததில் 11 பேர் பலி
Published on: 

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் பயணிகள் வேன் ஒன்று ஆற்றில் கவிழ்ந்ததில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விபத்து

நேற்று (வியாழக்கிழமை) மாலை, கிசர் மாவட்டத்தில் உள்ள யாசின் பள்ளத்தாக்கிற்கு கில்கிட்டிலிருந்து பயணிகள் வேன் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.

மோர்கா பாலம் அருகே சென்றபோது வாகனத்தின் கட்டுப்பாட்டை ஓட்டுநர் இழந்ததால், அது யாசின் ஆற்றில் கவிழ்ந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

11 பேர் பலி

மீட்புக் குழுவினர், இரண்டு பெண்கள் உட்பட 10 பயணிகளின் உடல்களை மீட்டனர். மேலும் ஒரு குழந்தை உட்பட காயமடைந்த மூன்று பயணிகள் மீட்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக குபிஸ் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை ஒன்று உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களும், காயமடைந்தவர்களும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள யாசின் பள்ளத்தாக்கை சேர்ந்தவர்கள் ஆவர். விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சாலை விபத்து

இப்பகுதியில் சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. கடந்த வாரம், ஹசாரா மோட்டார்வேயில் உள்ள ஹவேலியன் சந்திப்பு அருகே, கில்கிட்டிலிருந்து இஸ்லாமாபாத் நோக்கிச் சென்ற பயணிகள் பஸ் ஒன்று லாரியுடன் மோதியதில் எட்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் காயமடைந்தனர்.

X