பட்டினி போட்டு 190 குழந்தைகளை கொன்ற போதகருக்கு 200 ஆண்டுகள் சிறை

பட்டினி இருந்தால் இயேசுவை காணலாம் என்று கிராம மக்களை போதகர் மூளைச்சலவை செய்துள்ளார்.
பட்டினி போட்டு 190 குழந்தைகளை கொன்ற போதகருக்கு 200 ஆண்டுகள் சிறை
போதகர்
Published on: 

நைரோபி,

கென்யாவில் 190 குழந்தைகள் உட்பட 191 பேரை பட்டினி போட்டு கொன்ற வழக்கில், மத போதகர் பால் மெக்கன்சிக்கு 200 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மொம்பாசா கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

மூளைச்சலவை செய்த போதகர்

கென்யாவில் 'குட்நியூஸ் இண்டர்நேஷனல் சர்ச்' என்ற அமைப்பை நடத்தி வந்தவர் பால் மெக்கன்சி. தன்னை தீர்க்கதரிசி என்று கூறிக்கொண்ட இவர், "குடும்பத்துடன் உணவு உண்ணாமல் தீவிர பட்டினி விரதம் இருந்தால்தான் இயேசு கிறிஸ்துவை காண முடியும்" எனக் கூறி அப்பாவி கிராம மக்களை மூளைச்சலவை செய்துள்ளார்.

பண்ணையில் சடலங்கள்

இவரது பேச்சை நம்பி பட்டினி விரதம் இருந்த சுமார் 400 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. கடந்த 2023-ம் ஆண்டு கிலிபி நகரிலுள்ள பால் மெக்கன்சிக்கு சொந்தமான 800 ஏக்கர் பண்ணையில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அங்கு புதைக்கப்பட்டிருந்த சுமார் 400 பேரின் உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டது உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

200 ஆண்டுகள் சிறை

இது தொடர்பான வழக்கில், 190 குழந்தைகள் உட்பட 191 பேரின் மரணத்திற்கு பால் மெக்கன்சி மற்றும் அவரது கூட்டாளிகள் 28 பேரே காரணம் என கென்யா நீதிமன்றம் கடந்த அக்டோபர் 19-ம் தேதி உறுதி செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் பிரதான குற்றவாளியான பால் மெக்கன்சிக்கு 200 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மொம்பாசா கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

X