உக்ரைன்-ரஷ்யா இடையே ஜூன் மாதத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: ஜெலன்ஸ்கி அறிவிப்பு

முடிவு ஏற்படாவிட்டால், உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு அமெரிக்க அரசு அழுத்தம் கொடுக்கும் என தெரிகிறது என்று ஜெலன்ஸ்கி கூறினார்.

உக்ரைன்-ரஷ்யா இடையே ஜூன் மாதத்திற்குள் அமைதி ஒப்பந்தம்:  ஜெலன்ஸ்கி அறிவிப்பு
Published on

கீவ்,

உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே நடந்து வரும் போரானது 4-ம் ஆண்டு நிறைவை நெருங்கியுள்ளது. இந்த மாத 24-ந்தேதியுடன் போரின் 4-ம் ஆண்டு முடிந்து, 5-ம் ஆண்டை நோக்கி நகரும்.

இந்த சூழலில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நிருபர்களிடம் கூறும்போது, பேச்சுவார்த்தைக்கான ஒரு தெளிவான கால வரையறையை அமெரிக்கா முன்மொழிந்துள்ளது.

Also Read
நீ யார் என்னை கேள்வி கேட்பது? ஆசிரியை கன்னத்தில் அறைந்த மாணவன்

உக்ரைன்-ரஷ்யா இடையே ஜூன் மாதத்திற்குள் அமைதி ஒப்பந்தம்:  ஜெலன்ஸ்கி அறிவிப்பு

அதனால், ஜூன் மாதத்திற்குள் அமைதி ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் என அமெரிக்கா விருப்பம் தெரிவித்து உள்ளது. இந்த கால கட்டத்திற்குள் முடிவு ஏற்பட இரு தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டிய விசயங்களை உறுதி செய்யும் நோக்கில் அமெரிக்கா உள்ளது.

அந்த காலக்கெடுவுக்குள் முடிவு ஏற்படாவிட்டால், உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அழுத்தம் கொடுக்கும் என தெரிகிறது என்று கூறினார்.

இதற்கு முன் சமீபத்தில் அபுதாபியில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில், கோடை காலத்தின் தொடக்கத்திற்குள் தீர்வு ஏற்பட முடிவு செய்யப்பட்ட நிலையில், அது தோல்வியில் முடிந்தது. எல்லை மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் பற்றிய முக்கிய விசயங்கள் முடிவாகாதது இதற்கு காரணங்களாக அமைந்தன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com