

ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இஸ்லாமாபாத் வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்துப் பேசினார். ஈரான் - அமெரிக்கா மோதலுக்கு முடிவு கட்டும் நோக்கில் இன்று பாகிஸ்தானில் இருநாட்டு பிரதிநிதிகளும் ஆலோசனை செய்கிறார்கள். இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க தரப்பில் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பாகிஸ்தான் வந்தார். ஈரானுடன் பேச்சுவார்த்தை தொடங்கும் முன்பாக பாகிஸ்தான் பிரதமரை சந்தித்து பேசினார்.
பின்னர் இந்தச் சந்திப்பு குறித்து பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில், “இரு தரப்புப் பிரதிநிதிகளும் ஆக்கபூர்வமாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான உறுதிப்பாட்டைப் பாராட்டிய பிரதமர், இந்தப் பேச்சுவார்த்தைகள் இப்பிராந்தியத்தில் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கான ஒரு படிக்கல்லாக அமையும்” என்றார்.