பாகிஸ்தானில் உணவு நெருக்கடி அதிகரிப்பு: கோதுமை லாரியின் பின்னால் ஓடும் மக்கள்..!

பாகிஸ்தானில் கோதுமை மூட்டைகளை கொண்டு செல்லும் லாரி ஒன்றை நூற்றுக்கணக்கானோர் துரத்தி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பாகிஸ்தானில் உணவு நெருக்கடி அதிகரிப்பு: கோதுமை லாரியின் பின்னால் ஓடும் மக்கள்..!
Published on

இஸ்லமாபாத்,

பாகிஸ்தானில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பயங்கர மழையும், அதைத்தெடர்ந்து கட்டுங்கடங்காத வெள்ளமும் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் கோடிக்கணக்கிலான ஏக்கர் பயிர்கள் நாசம் அடைந்தன. பயிர்சாகுபடி சுமார் 80 சதவீதம் வரை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களுக்கு அந்நாட்டில் பற்றாக் குறை ஏற்பட்டது. வெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்களை இறக்குமதி செய்து பற்றாக்குறையை பாகிஸ்தான் அரசு ஈடு செய்து வந்தது.

இதனை ஈடு செய்ய பாகிஸ்தான் அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்களை இறக்குமதி செய்து வந்தது. இருப்பினும் அங்கு உணவு தானியங்களின் விலை தாறுமாறாக எகிறியது. இதனால் அரசின் சார்பில் மானிய விலையில் உணவு தானியங்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அங்கும் ஏராளமானோர் முண்டியடித்து சென்று வாங்கும் நிலை உள்ளது.

பாகிஸ்தானில் கோதுமை மூட்டைகளை கெண்டு செல்லும் லாரி ஒன்றை நூற்றுக்கணக்கானோர் துரத்தி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பெருளாதார நெருக்கடியால் பாகிஸ்தானில் உணவுப்பெருட்கள், மண்ணெண்ணெய், காய்கறிகள் ஆகியவற்றின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக, பாகிஸ்தான் மக்களின் முக்கிய உணவான கோதுமைக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. 20 கிலோ கோதுமை மாவு பாக்கெட் ரூ.3,100-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ சர்க்கரை ரூ.155, ஒரு கிலோ வெங்காயம் ரூ.280, ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com