நம்பிக்கையில்லா தீர்மானத்தை திரும்பப்பெற்றால் நாடாளுமன்றத்தை கலைக்க தயார் - இம்ரான்கான்

தனது அரசு மீது கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை திரும்பப்பெற்றால் நாடாளுமன்றத்தை கலைக்க தயார் என்று இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

லாகூர்,

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்த விவாதத்தை தொடர்ந்து தீர்மானத்தின் மீது வரும் 3-ம் தேதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்றால் இம்ரான்கான் அரசு கவிழும்.

இதற்கிடையில், இம்ரான்கான் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை பாகிஸ்தான் முட்டாஹிதா குவாமி இயக்கம் (எம்கியூஎம்) கட்சி விலக்கிக்கொண்டு எதிர்க்கட்சி பக்கம் சாய்ந்தது. இதனால், நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் கட்சி கூட்டணியின் பலம் 179-ல் இருந்து 164 ஆக குறைந்தது. மேலும், எம்கியூஎம் கட்சி எதிர்க்கட்சிக்கு ஆதரவளித்தது. இதனால், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் பலம் 177 ஆக அதிகரித்தது.

பாகிஸ்தானில் மொத்தம் 342 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. ஆட்சியமைக்க 172 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தற்போது, இம்ரான்கானின் கட்சிக்கு அளித்துவந்த ஆதரவை எம்கியூஎம் விலக்கிக்கொண்டதால் இம்ரான்கான் அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், இம்ரான்கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தற்போது விவாதம் நடைபெற்று வருகிறது.

விவாதத்திற்கு முன்னதாக, தன் அரசு மீது கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் திரும்பப்பெற்றால் நாடாளுமன்றத்தை கலைக்க தயார் என்று இம்ரான்கான் எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், இம்ரான்கானின் கோரிக்கையை எதிர்க்கட்சிகள் நிராகரித்துள்ளன. மேலும், இம்ரான்கான் அரசு மீது கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் தற்போது பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த விவாதத்திற்கு பின் இம்ரான்கான் அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் மீதான வாக்கெடுப்பு வரும் 3-ம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com