நியூசிலாந்து சென்றார் பிரதமர் மோடி...!

பிரதமர் மோடி 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
நியூசிலாந்து சென்றார் பிரதமர் மோடி...!
Published on

ஆக்லாந்து,

அரசு முறை பயணமாக பிரதமர் மோடி 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அதன்படி, முதல் நாடாக இந்தோனேசியா சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாந்தோவை சந்தித்தார். இதனை தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்தோனேசிய பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி ஆஸ்திரேலியா சென்றார். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனிசை சந்தித்த பிரதமர் மோடி இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

நியூசிலாந்து பயணம்

இந்நிலையில், ஆஸ்திரேலிய பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி இன்று நியூசிலாந்து சென்றுள்ளார். தலைநகர் ஆக்லாந்து சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சான் விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றார். இந்த பயணத்தின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், பாதுகாப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர். மேலும், நியூசிலாந்து வாழ் இந்தியர்களையும் பிரதமர் மோடி சந்திக்கிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com