கராச்சி பேரணியில் இம்ரான் கானை சிறைக்கு அனுபுவேன் எனக் கூறிய மரியம் நவாஸின் கணவர் கைது

கராச்சி பேரணியில் இம்ரான் கானை சிறைக்கு அனுப்புங்கள் என பேசிய முன்னாள் பிரதமர் நவாஸ் செரீபின் மகள் மரியம் நவாஸின் கணவர் ஓட்டல் அறைக்கதவை உடைத்து கைது செய்யபட்டார்.
கராச்சி பேரணியில் இம்ரான் கானை சிறைக்கு அனுபுவேன் எனக் கூறிய மரியம் நவாஸின் கணவர் கைது
Published on

கராச்சி:

பாகிஸ்தானின் கராச்சியில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக பாகிஸ்தானின் 11 எதிர்க்கட்சிகளின் கூட்டணி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இது எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆரப்பாட்டமாகும். முதலாவது லாகூரில் உள்ள குஜ்ரான்வாலாவில் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பி.எம்.எல்-என்) துணைத் தலைவர் மரியம் நவாஸ், மத்திய அரசாங்கத்தால் அவமானத்திற்கும் அவதூறுகளுக்கும் ஆளானதாக தெரிவித்துள்ளார்.

தனது தந்தையை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்து இம்ரான் கானை சிறைக்கு அனுப்புவதாக உறுதியளித்தார்.

அவர் கூட்டத்தில் பேசியதாவது:-

நேற்று, உங்கள் தொலைக்காட்சித் திரைகளில் ஒரு மனிதன் தனது தோல்வியைக்காக கத்துவதை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். பிரதமர் என்றால் உங்கள் பயம் ஒவ்வொரு வார்த்தையிலிருந்தும், உங்களுடைய ஒவ்வொரு செயலிலிருந்தும் தெளிவாகத் தெரிந்தது, மேலும் மக்கள் இந்த பயத்தை உங்கள் முகத்தில் காண விரும்புகிறார்கள்.

உங்களுக்கு அன்பை காட்டத் தெரியாவிட்டால், உங்களுக்கு கற்பிக்க யாரும் இல்லை என்றால், நீங்கள் நவாஸ் ஷெரீப்பிடமிருந்து கற்றுக்கொண்டிருக்க வேண்டும்.

நாட்டின் பொருளாதாரம் - ஏற்கனவே உலகளாவிய தொற்றுநோய்க்கு முன்பே சரிந்துவிட்டது. - இரட்டை இலக்க பணவீக்கம் மற்றும் எதிர்மறை வளர்ச்சியுடன் போராடுகிறது என கூறினார்.

இந்த நிலையில் மரியம் நவாஸின் கணவர் பாகிஸ்தான் போலீச்சால் கைது செய்யப்பட்டார். மரியம் நவாஸின் கணவர் சப்தார் அவானை அவர்கள் கராச்சியில் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து போலீசார் கைது செய்துள்ளனர். பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் அவர் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிட தக்கது.

இதுகுறித்து மரியம் நவாஸ் தனதுடுவிட்டரில் நான் கராச்சியில் தங்கியிருந்த ஓட்டலில் எனது அறைக் கதவை உடைத்து கேப்டன் சப்தாரை கைது செய்தனர் எனக்கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com