பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் ஐநா சபை முன்பு ஆர்ப்பாட்டம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் ஐநா சபை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் ஐநா சபை முன்பு ஆர்ப்பாட்டம்
Published on

ஜெனீவா,

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சுமார் 13 ஆயிரத்து 300 சதுர கி.மீ. பகுதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியாக உள்ளது.

தற்போது பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பகுதி சுயாட்சி மாநிலமாக இருக்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவுத்துறை (ஐ.எஸ்.ஐ.) இணைந்து நீண்ட காலமாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த அடக்கு முறைக்கு எதிராகவும், பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை வேண்டியும் அங்கு போராட்டமும் நடைபெற்று வருகிறது. இதனால், பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் அடக்குமுறைகளுக்கு எதிராக உலக அரங்கில் இந்தியாவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

இந்த சூழலில், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அவையின் முன்பு, ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகவும் அங்குள்ள நீர் வளங்களை பாகிஸ்தான் சுரண்டுவதாகவும் கூறி அவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வாழும் கிறிஸ்தவர்கள் மதநிந்தனை சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படுகிறார்கள் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வைத்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com