வயது முதிர்வால் பதவி விலகலா? போப் ஆண்டவர் பதில்

போப் ஆண்டவர் பிரான்சிஸ் பதவி விலகும் முடிவை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
வயது முதிர்வால் பதவி விலகலா? போப் ஆண்டவர் பதில்
Published on

ரோம்,

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் சமீபகாலமாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறார். மூட்டு தசைநார் வீக்கமடைந்த நிலையில் அவர் ஒரு மாதத்துக்கும் மேலாக சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் 85 வயதாகும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் வயது மூப்பு மற்றும் உடல்நிலை பிரச்சினைகள் காரணமாக எந்த நேரத்திலும் பதவி விலகலாம் என தகவல்கள் பரவி வருகின்றன. குறிப்பாக கோடை காலத்தின் இறுதியில் அவர் பதவி விலகும் முடிவை அறிவிக்கலாம் என செய்திகள் வலம் வருகின்றன.

இந்த நிலையில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பிரபல பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "கோடை இறுதியில் பதவி விலகலை அறிவிக்கும் எண்ணம் எனது மனதில் நுழையவே இல்லை" என்றார்.

மேலும் அவர் இந்த பேட்டியின்போது, இந்த மாதம் 24-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை கனடாவில் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், அந்த பயணத்தின்போது போர் நடந்து வரும் உக்ரைனுக்கு செல்வேன் என தான் நம்புவதாகவும் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com