ரஷியாவின் கிழக்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4.6 புள்ளிகளாக பதிவு

ரஷியாவின் கிழக்கு பகுதியில் உள்ள காம்சட்கா தீபகற்பத்தில் உள்ள மில்கோவோ நகரில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரஷியாவின் கிழக்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4.6 புள்ளிகளாக பதிவு
Published on


* லிபியாவின் பெங்காசி நகரில் உள்ள அமெரிக்க சிறப்பு தூதரகம் மீது கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க தூதர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த தாக்குதல் தொடர்பாக லிபியாவை சேர்ந்த முஸ்தபா அல் இமாம் என்பவர் கைது செய்யப்பட்டு அமெரிக்க கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் முஸ்தபாவுக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார்.

* சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் இத்லீப் மாகாணத்தில் சாராகியூப் மற்றும் அர்னாபா நகரங்களில் ரஷிய படைகள் வான் தாக்குதல்கள் நடத்தின. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட அப்பாவி மக்கள் 8 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 5 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

* ரஷியாவின் கிழக்கு பகுதியில் உள்ள காம்சட்கா தீபகற்பத்தில் உள்ள மில்கோவோ நகரில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்த தகவல்கள் இல்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com