அபுதாபி இளவரசர் பாகிஸ்தான் பயணம்

இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் சவுதி இளவரசர் பாகிஸ்தான் நாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
அபுதாபி இளவரசர் பாகிஸ்தான் பயணம்
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையேயான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் அபுதாபி இளவரசர் சேக் முகமது பின் சாயீது அல் நஹ்யான், வரும் வியாழன் அன்று பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இந்த பயணத்தின் போது இளவரசர் சேக் முகமது, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதற்கு முன்பாக அபுதாபி இளவரசர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டார். அந்த பயணத்தின் போது பாகிஸ்தானின் பொருளாதார மந்த நிலையை சரிசெய்ய ரூபய் 300 கோடி அமெரிக்க டாலர்கள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com