மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக சிறையில் கைதிகள் போராட்டம்

மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு பல மாதங்களாக போராட்டங்கள் நடந்து வருகின்றன.
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக சிறையில் கைதிகள் போராட்டம்
Published on

மருத்துவர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு அரசு ஊழியர்களும் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தற்போது சிறையில் உள்ள கைதிகள் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். யாங்கூன் நகரில் உள்ள இன்சைன் என்கிற சிறை அந்த நாட்டின் மிகவும் மோசமான சிறையாக அறியப்படுகிறது. முந்தைய அரசின் மூத்த அதிகாரிகள் பலரும், ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்ட நபர்களும் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று இந்த சிறையில் உள்ள கைதிகள் அனைவரும் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணுவ ஆட்சிக்கு எதிரான பாடல்களை பாடியும் கண்டன கோஷங்களை எழுப்பியும் கைதிகள் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர். கைதிகள் சுமார் 2 மணி நேரத்துக்கு விடாமல் கோஷங்களை எழுப்பியதாக சிறைக்கு அருகே உள்ள குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர்.

மேலும் கைதிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து ராணுவ வாகனங்கள் சிறைக்குள் சென்றதாகவும், அறைக்கு வெளியே ஏராளமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டதாகவும் குடியிருப்புவாசிகள் குறிப்பிட்டனர். எனினும் கைதிகளின் இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவிக்க சிறை நிர்வாகம் மறுத்து விட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com