ரஷியாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பிராந்தியங்களில் ராணுவ சட்டம் அமல்: புதின் அதிரடி

ரஷியாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பிராந்தியங்களில் ராணுவ சட்டம் அமல்படுத்தப்படுவதாக புதின் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மாஸ்கோ,

சிறப்பு ராணுவ நடவடிக்கை என கூறி உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கி 8 மாதங்கள் ஆகிறது. ஆனாலும் போர் முடிவில்லாமல் நீண்டு கொண்டு இருக்கிறது. இந்த போரில் உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை சமீபத்தில் ரஷியா தன்னுடன் இணைத்துக்கொண்டது.

இது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து, சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட அந்த 4 பிராந்தியங்களையும் ரஷியாவிடம் இருந்து மீட்டெடுக்க உக்ரைன் ராணுவம் கடுமையாக போராடி வருகிறது.

இந்த நிலையில் ரஷியாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைனின் 4 பிராந்தியங்களிலும் ரஷிய அதிபர் புதின் ராணுவ சட்டத்தை அமல்படுத்தி உள்ளார். ராணுவ சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து புதின் குறிப்பிடவில்லை. அதே சமயம் இந்த உத்தரவு இன்று (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com