ரஷ்ய அதிபர் புதின் - இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சந்திப்பு: இருதரப்பு உறவு, உலகளாவிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சந்திப்பு
ரஷ்ய அதிபர் புதின்,இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ். ஜெய்சங்கர் மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்கெய் லாவ்ரோ
Published on

மாஸ்கோ

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ். ஜெய்சங்கர் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவு, உலகளாவிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

மாஸ்கோ பயணம்

இந்தியா-ரஷ்யா இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் இரு நாடுகளும் முயற்சித்து வரும் நிலையில், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ். ஜெய்சங்கர் ரஷியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 2 நாள் பயணமாக சென்றுள்ள ஜெய்சங்கர், நேற்று இரவு மாஸ்கோ சென்றடைந்தார். இன்று ரஷ்ய அதிபர் புதினும், ஜெய்சங்கரும் சந்தித்து இந்தியா-ரஷ்யா இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் சர்வதேச அளவிலான முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

நட்பு வலுக்கும்

இதற்கு முன்னதாக, ரஷ்யாவின் முதல் துணைப் பிரதமர் டெனிஸ் மாந்துரோவை ஜெய்சங்கர் சந்தித்து, இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பேசிய ஜெய்சங்கர், சிக்கலான சர்வதேச சூழலுக்கு மத்தியிலும் இந்தியா-ரஷ்யா கூட்டாண்மை தொடர்ந்து வலுவடைந்து வருவதாக தெரிவித்தார்.

முக்கியமான சந்திப்பு

இந்த பயணத்தில் அடுத்து ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்கெய் லாவ்ரோவையும் ஜெய்சங்கர் சந்தித்து, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். இருவரும் ஏற்கனவே ஜூலை 22 ஆம் தேதி வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டத்தின்போது சந்தித்து பேசியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

செப்டம்பர் 12 மற்றும் 13-ந் தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com