சீக்கிய பக்தர்கள் வருவதற்காக கர்தார்பூர் பாதையை திறக்க தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு

சீக்கிய பக்தர்கள் வருவதற்காக கர்தார்பூர் பாதையை திறக்க தயார் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
சீக்கிய பக்தர்கள் வருவதற்காக கர்தார்பூர் பாதையை திறக்க தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் 500 ஆண்டுகள் பழமையான குருத்வாரா உள்ளது. அங்கு சீக்கியர்கள் புனித பயணம் செல்வது வழக்கம். அதற்காக, அங்கிருந்து இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் ஆலயம்வரை பாதை அமைக்க இந்தியாவும், பாகிஸ்தானும் முடிவு செய்தன. அதன்படி, இரு நாடுகளும் அவரவர் பகுதியில் பாதை அமைத்துள்ளன. இந்நிலையில், சீக்கிய மத குரு, குருநானக்கின் 550-வது பிறந்தநாள் விரைவில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்தியாவில் இருந்து சீக்கிய பக்தர்கள் வருவதற்காக, கர்தார்பூர் பாதையை திறந்து விடத்தயார் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆப்கானிஸ்தான் எம்.பி.க்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குழுவிடம் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மெஹமூத் குரேஷி இதை தெரிவித்தார். இந்தியாவுடன் பதற்றம் இருந்தாலும், கர்தார்பூர் பாதையை திறந்துவிட்டு, சீக்கிய பக்தர்களை வரவேற்க தயார் என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com