இங்கிலாந்து அரச குடும்பத்தில் சமரசம்; 4 ஆண்டுகளுக்குப் பின் பேரக்குழந்தைகளை சந்தித்த மன்னர்

கடந்த 2020-ல் அரச பதவிகளைத் துறந்து ஹாரி-மேகன் தம்பதி அமெரிக்காவில் குடியேறியதால் குடும்பத்தில் பெரும் விரிசல் ஏற்பட்டது
இங்கிலாந்து அரச குடும்பத்தில் சமரசம்;  4 ஆண்டுகளுக்குப் பின் பேரக்குழந்தைகளை சந்தித்த மன்னர்
Published on

லண்டன்,

இங்கிலாந்து அரச குடும்பத்தில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த கசப்புணர்வை மாற்றி, உறவை புதுப்பிக்கும் நோக்கில் மன்னர் 3-ம் சார்லஸ் (வயது 77) தனது இளைய மகன் இளவரசர் ஹாரியை நேரில் சந்தித்துப் பேசினார். லண்டனின் ஹைக்ரோவ் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

கடந்த 2020-ல் அரச பதவிகளைத் துறந்து ஹாரி-மேகன் தம்பதி அமெரிக்காவில் குடியேறியதால் குடும்பத்தில் பெரும் விரிசல் ஏற்பட்டது. இந்நிலை யில், தற்போது லண்டன் வந்துள்ள ஹாரி, தனது மனைவி மேகன் மற்றும் குழந்தைகளான ஆர்ச்சி, லிலிபெட் ஆகியோருடன் மன்னரை சந்தித்தார்.

கடந்த 2022-ல் மகாராணி எலிசபெத்தின் பவள விழாக் கொண்டாட்டத்திற் குப் பிறகு, சுமார் 4 ஆண்டுகள் கழித்துத் தனது பேரக்குழந்தைகளை நேரில் கண்ட மன்னர் சார்லஸ் நெகிழ்ச்சியடைந்தார். அரச குடும்பத்தின் இந்த திடீர் சமரச முயற்சி இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com