எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க பாகிஸ்தானில் இன்று முதல் கட்டுப்பாடுகள் அமல்

ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடிய விவகாரம் நேரடியாக பல நாடுகளில் எதிரொலித்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க பாகிஸ்தானில் இன்று முதல் கட்டுப்பாடுகள் அமல்
Published on

இஸ்லாமாபாத்,

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி கூட்டு ராணுவ தாக்குதலை நடத்தியது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் நாட்டின் முக்கிய நகரங்களை குறிவைத்து நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி மட்டுமின்றி 180 சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

இதற்கு பழி தீர்க்கும் வித மாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அதன் நட்பு நாடுகள் மீது ஈரான் போர் அறிவித்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டது.

உலகுக்கு தேவையான 25 சதவீதம் அளவிலான கியாஸ், பெட்ரோல், டீசல் மற்றும் கச்சா எண்ணெய் பொருட்கள் இதன் வழியாக விநியோகம் ஆகி வந்த நிலையில் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடிய விவகாரம் நேரடியாக பல நாடுகளில் எதிரொலித்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பியுள்ள பல நாடுகளில் எரிபொருள் மற்றும் கியாஸ் தட்டுப்பாடு ஏற்பட்டது.

குறிப்பாக ஆசியா நாடுகளான சீனா, ஜப்பான், பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை உள்ளிட்வற்றில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு தாறுமாறாக விலை உயர்ந்தது. மேலும் இது நேரடியாக அந்தந்த நாடுகளின் பொருளாதாரத்தை பலம் இழக்க செய்தது. போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகளுடன் மத்தியஸ்தம் செய்ய முயற்சி செய்து வருகின்றன.

இந்த நிலையில், மத்திய கிழக்கு போர் பதற்றால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க பகுதியளவு பொதுமுடக்கத்தை பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

இதன்படி இன்று முதல் கடைகள், வணிக வளாகங்களை இரவு மணியுடன் மூட வேண்டும், உணவகங்கள், திருமண அரங்குகள் 10 மணிக்கு மேல் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் பிரதமர் ஷபாஸ் ஷரிப் தலைமையில் நடந்த உயர்மட்டக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com