30 வயதில் ஓய்வு... ஆண்டுக்கு ரூ.29 லட்சம் வருமானம்! சீன இளைஞரின் வித்தியாசமான முதலீடு!

ஈவுத்தொகை வழங்கும் பங்குகள் மற்றும் பண்டுகளில் தனது பணத்தை முதலீடு செய்யப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
30 வயதில் ஓய்வு... ஆண்டுக்கு ரூ.29 லட்சம் வருமானம்! சீன இளைஞரின் வித்தியாசமான முதலீடு!
பழைய வீடுகள்
Published on: 

பெய்ஜிங்,

திட்டமிட்ட முதலீடும் கடின உழைப்பும் இருந்தால் இளம் வயதிலேயே வேலையிலிருந்து ஓய்வு பெற முடியும் என்பதை நிரூபித்துள்ளார் சீனாவைச் சேர்ந்த 30 வயது இளைஞர்.

18 மணி நேர கடின உழைப்பு

வடகிழக்கு சீனாவின் ஜிலின் மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் பான் ஜுன்ஜி. இவர், வேலைக்காக ஹுனான் மாகாணத்திலுள்ள சாங்ஷா நகருக்கு குடிபெயர்ந்தார். அங்குள்ள இணையவழி மருத்துவத் துறையில் தினமும் சுமார் 18 மணி நேரம் வரை கடினமாக உழைத்து பணத்தைச் சேமித்தார்.

பழைய வீடுகளில் சாமர்த்தியமான முதலீடு

பெரிய நகரங்களில் உள்ள அதிக விலை கொண்ட ஆடம்பர வீடுகளை வாங்குவதற்குப் பதிலாக, சாங்ஷா நகரின் மையப்பகுதியான சியாங்கியா ஆஸ்பத்திரிக்கு அருகிலுள்ள பழைய மற்றும் சிறிய வகை வீடுகளை மலிவு விலையில் வாங்கத் திட்டமிட்டார். அதன்படி கடந்த 2023-ம் ஆண்டு தொடங்கி 2 ஆண்டுகளில் மொத்தம் 14 பழைய வீடுகளை அவர் வாங்கினார். இதற்காக சீரமைப்புச் செலவுகளையும் சேர்த்து மொத்தம் 2 மில்லியன் யுவானுக்கும் (சுமார் ரூ.2.8 கோடி) அதிகமாக முதலீடு செய்தார்.

30 வயதில் முன்கூட்டிய ஓய்வு

வாங்கிய 14 வீடுகளில் 11 வீடுகளை அவர் வாடகைக்கு விட்டுள்ளார். இதன் மூலம் அவருக்கு ஆண்டுக்கு சுமார் 210,000 யுவான் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.29.4 லட்சம்) வாடகை வருமானமாகக் கிடைத்து வருகிறது. நிலையான வருமானம் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தனது 30-வது வயதில் வேலையை விட்டு விலகி முன்கூட்டியே ஓய்வு பெற்றுள்ளார்.

ரியல் எஸ்டேட்டில் இருந்து பங்குச் சந்தைக்கு மாற்றம்

இருப்பினும், வீடுகளைப் பராமரிப்பதிலும், வாடகைதாரர்களைக் கையாள்வதிலும் உள்ள சிரமங்கள் மற்றும் எதிர்காலத்தில் சொத்து மதிப்பு குறையக்கூடும் என்ற அச்சம் காரணமாக, இனிமேல் பழைய வீடுகளை வாங்கப் போவதில்லை என்று கடந்த அக்டோபர் மாதம் 26-ம் தேதி அன்று அவர் அறிவித்துள்ளார். இதற்குப் பதிலாக, ஈவுத்தொகை வழங்கும் பங்குகள் மற்றும் பண்டுகளில் தனது பணத்தை முதலீடு செய்யப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

X