உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் - 5 பேர் பலி

உக்ரைன் , ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் - 5 பேர் பலி
Published on

கீவ்,

உக்ரைன் மீது ரஷியா நடத்திய டிரோன் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.

உக்ரைன் - ரஷியா போர்

உக்ரைன் , ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

ரஷியா தாக்குதல் - 5 பேர் பலி

இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா இன்று டிரோன் தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் மாகாணம் நிகோபொல் நகர் மீது ரஷியா நடத்திய டிரோன் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த தாக்குதலில் 7 பேர் படுகாயமடைந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com