ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு ரஷியா தொடர்ந்து ஆதரவு!

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு ரஷிய வெளியுறவு மந்திரி ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு ரஷியா தொடர்ந்து ஆதரவு!
Published on

நியூயார்க்,

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் இன்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 77வது ஆண்டு கூட்டத்தில் உரையாற்றிய ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் இதனை கூறினார்.

உக்ரைன் போருக்கு முற்றுபுள்ளி வைக்க நேர்மையான உரையாடல் மற்றும் சமரசத்தைத் தேடுவதற்குப் பதிலாக, அமெரிக்கா முழு உலகத்தையும் தனது பின்புறமாக மாற்ற முயற்சித்தது என்றார்.அதேபோல பிரேசிலுக்கும் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு ரஷியா ஆதரவளித்துள்ளது.

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சீர்திருத்தங்களுக்கு அழுத்தம் கொடுக்க ஐ.நா.வின் முயற்சிகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. தற்போது, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் 5 நிரந்தர உறுப்பினர்களையும், 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளையும் கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com