பாலம் தகர்ப்புக்கு பிறகு ரஷியா-கிரிமியா இடையே படகு போக்குவரத்து தொடக்கம்

கிரிமியா தீபகற்பத்திற்கும், ரஷியாவிற்கும் இடையே படகு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
பாலம் தகர்ப்புக்கு பிறகு ரஷியா-கிரிமியா இடையே படகு போக்குவரத்து தொடக்கம்
Published on

கிரிமியா,

கிரிமியா தீபகற்பத்தில் ரஷியாவால் கட்டப்பட்ட கெர்ச் தரைப்பாலம், கடந்த சனிக்கிழமை அன்று குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இந்த குண்டுவெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பாலம் சேதமடைந்ததால் ரஷியா - கிரிமியா இடையிலான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

கெர்ச் பாலத்தில் சேதமடைந்த பகுதிகளை விரைவில் சீரமைப்பதற்கு பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கிரிமியாவில் 40 நாட்களுக்கு தேவையான எரிபொருள், உணவு ஆகியவை கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கிரிமியா தீபகற்பத்திற்கும், ரஷியாவிற்கும் இடையே படகு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. வடக்கு ரஷியாவில் உள்ள ரூஸ் டமன் தீபகற்பம் வரை ஒரே ஒரு படகு மட்டும் தற்போது இயக்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் இந்த எண்ணிக்கை 3ஆக அதிகரிக்க உள்ளதாக ரஷிய அரசு தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com