உக்ரைன் தலைநகரில் டிரோன் தாக்குதல் நடத்திய ரஷியா - 8 பேர் உயிரிழப்பு

குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் பொது கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைன் தலைநகரில் டிரோன் தாக்குதல் நடத்திய ரஷியா - 8 பேர் உயிரிழப்பு
Published on

கீவ்,

ரஷியா-உக்ரைன் இடையிலான போர் சுமார் 5 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்ட நிலையில் அது தோல்வியில் முடிந்தது. இதனால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உக்ரைன் மீது தாக்குதல்

இந்நிலையில், உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் மீது நேற்று இரவு ரஷிய ராணுவம் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதலில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 34 பேர் படுகாயமடைந்துள்ளனர். நகரின் 28 இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் பொது கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரஷியா மீது உக்ரைன் நடத்திய தாக்குதல்

முன்னதாக, உக்ரைன் ராணுவம் சமீபத்தில் ரஷியாவிற்குள் புகுந்து அங்கிருந்த 50-க்கும் மேற்பட்ட பெரிய பெட்ரோல், டீசல் தயாரிக்கும் தொழிற்சாலைகளைத் குண்டு வீசி தகர்த்துள்ளது. இதனால், உலகிற்கே பெட்ரோல் கொடுக்கும் வல்லமை படைத்த ரஷியாவில் இப்போது வரலாறு காணாத பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com