ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,571 பேருக்கு கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42.57 லட்சமாக அதிகரித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மாஸ்கோ,

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாம் இடத்தில் பிரேசிலும் உள்ளன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 11,571 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் ரஷ்யாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,57,650 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனாவுக்கு ஒரே நாளில் 333 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 86 ஆயிரத்து 455 ஆக உயர்ந்துள்ளது. மேலும், ரஷ்யாவில் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 38,23,074 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 3,48,121 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com