ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,646 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

ரஷ்யாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45.89 லட்சத்தைக் கடந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மாஸ்கோ,

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும், நான்காவது இடத்தில் பிரான்சும் உள்ளன. உலகம் முழுவதும் இதுவரை 13.19 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8,646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 45,89,540 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 343 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 717 ஆக (1,00,717) உயர்ந்துள்ளது. ரஷ்யாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 42,11,133 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் தற்போது 2,77,690 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com