உக்ரைன் போரில் அதிர்ச்சி: ஒரே நாளில் 234 வீரர்களை கொன்று குவித்த ரஷிய ராணுவம்

உக்ரைனின் ஊடுருவலை முறியடிக்கும் போது 234 வீரர்களை கொன்றதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.
Image Courtacy: AFP
Image Courtacy: AFP
Published on

மாஸ்கோ,

உக்ரைன்-ரஷியா போர் தொடங்கி 3 ஆண்டுகளாக நீடித்து வரும்நிலையில் போர் தீவிரத்தை ரஷியா கடைப்பிடித்து வருகிறது. அதன்படி ரஷியா உடனான எல்லைகளில் முகாம்கள் அமைத்துள்ள உக்ரைன் வீரர்கள் மீது ரஷிய ராணுவம் தரைவழி தாக்குதல் நடத்தியது.

ரஷியாவின் குர்ஸ்க் மற்றும் பெல்கோரோட் பிராந்தியங்களில் நடத்தப்பட்ட இந்த அதிரடி தாக்குதலில் ராணுவ டாங்கிகள், கவச வாகனங்கள், நவீன பீரங்கிகள் உள்ளிட்டவற்றை ரஷிய ராணுவம் பயன்படுத்தியது. நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்ட இந்த ரகசிய நடவடிக்கையில் உக்ரைன் ராணுவத்தினர், துணை ராணுவத்தினர், கூலிப்படைகள் உள்ளிட்டோர் ரஷியாவின் தாக்குதலை சமாளிக்க முயற்சித்து தோல்வி அடைந்தனர்.

இந்த தாக்குதலில் உக்ரைன் ராணுவத்தை சேர்ந்த 234 பேரை கொன்று குவித்ததாக ரஷியா ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் ரஷியாவின் 7 ராணுவ டாங்கிகள் மற்றும் 5 கவச வாகனங்கள் தாக்குதலில் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com