ரஷியா: பள்ளியில் துப்பாக்கிச்சூடு - குழந்தைகள் உட்பட 13 பேர் பலி

ரஷியாவின் மத்தியப்பகுதியில் உள்ள பள்ளியில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள் உட்பட13 பேர் உயிரிழந்தனர்.
ரஷியா: பள்ளியில் துப்பாக்கிச்சூடு - குழந்தைகள் உட்பட 13 பேர் பலி
Published on

மாஸ்கோ,

ரஷியாவின் மத்திய பகுதியில் உள்ள இஷெவ்ஸ்க் நகரில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏழு குழந்தைகள் உட்பட குறைந்தது 13 பேர் உயிரிழந்ததுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களுக்கு உதவ, "14 ஆம்புலன்ஸ் குழுக்கள்" சம்பவ இடத்தில் பணியாற்றி வருவதாக ரஷியாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து அம்மாகாணத்தின் ஆளுநர் கூறுகையில்,

அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் இஷெவ்ஸ்கில் உள்ள ஒரு பள்ளிக்குள் நுழைந்து ஒரு காவலரையும் அங்கிருந்த சில குழந்தைகளையும் கொன்றதாக வீடியோவில் பதிவாகி உள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். பள்ளி குழந்தைகள் வெளியேற்றப்பட்டு, அதைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக போலீசார் ஒருவர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபர், நாஜிப்படை இலச்சினை கொண்ட தொப்பியை அணிருந்திருந்ததாக சம்பவ இடத்தில் இருந்த மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com