உக்ரைன் தலைநகர் கீவ்வை சுற்றி வளைத்த ரஷிய படைகள்..!

உக்ரைன் தலைநகர் கீவ்வை சுற்றி வளைத்து ரஷிய படைகள் தற்காப்பு நிலைகளை அமைத்துள்ளது.
கோப்புப் படம் AFP
கோப்புப் படம் AFP
Published on

கீவ்,

அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர், ரஷிய படைகள் தலைநகர் கீவ்வின் மையத்தை நோக்கி நகர்வதில் எந்த முன்னேற்றமும் இல்லாமல், கீவ்விற்கு வெளியே 15-20 கிலோமீட்டர்கள் தூரத்தில் சுற்றி வளைத்து தற்காப்பு நிலைகளை அமைத்து நிலைகொண்டுள்ளது என்று கூறியுள்ளார்.

ரஷிய படைகள் நகரத்திற்குள் முன்னேற முயற்சிக்கவில்லை என்று கூறிய அவர், மேலும் கீவ்வின் கிழக்கே, உக்ரைன் வீரர்கள், ரஷிய படைகளை பின்வாங்க செய்துள்ளனர். ரஷிய படைகள் கிழக்கு மற்றும் வடகிழக்கில் 20-30 கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்தது, தற்போது சுமார் 55 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கின்றன.

அதற்கு பதிலாக, ரஷிய படைகள் கிழக்கு டான்பாஸ் பிராந்தியத்தில், குறிப்பாக லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்கில் அதிக ஆற்றலையும் முயற்சியையும் செலுத்துகின்றன. உக்ரைன் படையை அந்த பகுதிகளில் துண்டித்து, மற்ற நகரங்களை பாதுகாக்க மேற்கு நோக்கி நகர்வதை தடுக்கும் முயற்சியில், ரஷியா அங்கு சண்டையிடுவதற்கு முன்னுரிமை கொடுக்கிறது.

அமெரிக்காவின் ஆயுதங்கள் மற்றும் பிற பாதுகாப்பு உதவிகள் உக்ரைனுக்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்காவால் அங்கீகரிக்கப்பட்ட 350 மில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் நாளை மறுநாள் உக்ரைனுக்கு வந்து சேரும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com