

கீவ்,
உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்.
உக்ரைன் , ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. அதேவேளை, பேச்சுவார்த்தை மூலம் போரை நிறுத்த இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ஆனாலும், இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைனின் கார்கிவ், ரமட்ரோஸ், வலொன், ரிவ்னி ஆகிய பகுதிகளில் உள்ள மின் கட்டமைப்புகள், வணிக வளாகங்களை குறிவைத்து நேற்று இரவு ரஷியா ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 60 பேர் படுகாயமடைந்தனர்.